ரெயில் மறியலுக்கு முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 30 பேர் கைது


ரெயில் மறியலுக்கு முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 30 பேர் கைது
x

ரெயில் மறியலுக்கு முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 30 பேரை கைது செய்தனர்.

விருதுநகர்


ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து விருதுநகரில் ஆதிதமிழர் கட்சியினர் மாநில பொதுச் செயலாளர் விஸ்வை குமார் தலைமையில் ரெயில் மறியலுக்கு முயன்றனர். எனினும் போலீசார் அவர்களை வழிமறித்து கைது செய்தனர். 10 பெண்கள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண அரங்கில் வைக்கப்பட்டனர். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் சாமி, கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஆதிதமிழர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.



Related Tags :
Next Story