ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 30 பேர் கைது


ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 30 பேர் கைது
x

ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நேற்று காலை குளித்தலை சுங்ககேட் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து குளித்தலை போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த 26 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி குளித்தலையில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக புதிய தமிழகம் கட்சியினர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story