மாதாந்திர குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு - மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கியது


மாதாந்திர குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு - மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கியது
x

மாதாந்திர குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் பரிசுகளை வழங்கியது.

சென்னை

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுபொருட்கள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதன்படி 9-வது மாதாந்திர குலுக்களில் 30 பயணிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டோருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. மெட்ரோ ரெயிலில் அதிகமுறை பயணம், ஒரு பரிவர்த்தனைக்கு அதிக பணம் செலுத்தியது, பயண அட்டையில் குறைந்த பட்ச தொகையான ரூ.500-க்கு டாப்-அப் செய்தது என 3 பிரிவுகளில் தலா 10 பேர் வீதம் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி பரிசு வழங்கினார். இதில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் பிரிவில் இளநீர் வியாபாரி செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார். அவர், ஒரு மாதத்தில் 119 முறை பயணம் செய்ததற்காக இந்த பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story