புகைபிடித்த 30 பேருக்கு அபராதம்


புகைபிடித்த 30 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:30 AM IST (Updated: 1 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புகைபிடித்த 30 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்தனர். இதையடுத்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பயணிகள், கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புகைப்பிடித்த நபர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

இதில் மொத்தம் 30 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பொதுஇடங்களில் புகைபிடித்தல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.


Next Story