30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 4 பேர் கைது


30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 4 பேர் கைது
x

நெல்லை அருகே 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர். அப்போது தாழையூத்து பகுதியில் துணிப்பைகளில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அரிசியை கடத்தி செல்வதற்காக லாரி, கார்கள் உள்பட 5 வாகனங்கள், 7 மோட்டார் சைக்கிள்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்லப்பா, முத்துக்குமார், தங்கராஜ், பால்சாமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story