2 லாரிகளுடன் 300 மூடை கூழாங்கற்கள் பறிமுதல்


2 லாரிகளுடன் 300 மூடை கூழாங்கற்கள் பறிமுதல்
x

2 லாரிகளில் கடத்தி வந்த 300 மூடை கூழாங்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

காரியாபட்டி,

2 லாரிகளில் கடத்தி வந்த 300 மூடை கூழாங்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டிரைவர்கள் ஓட்டம்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, ஆதித்தனேந்தல் கிராம நிர்வாக அதிகாரி பால்சாமி மற்றும் தலையாரி ரோந்து சென்றனர்.

நரிக்குடி ெரயில்வே கிராசிங் அருகே 2 லாரிகள் நிற்பதை கண்ட அவர்கள், சந்தேகத்தின் பேரில் லாரி அருகே சென்றனர். அப்போது, 2 லாரியில் இருந்த டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

2 லாரிகள் பறிமுதல்

இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி பால்சாமி, லாரியை சோதனை செய்தார். அப்போது, லாரியில் சுமார் 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கூழாக்கற்களுடன் 2 லாரிகளை அவர் பறிமுதல் செய்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூழாக்கற்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ேபாலீசார் கூறும்போது, இந்த கூழாங்கற்களை அரைத்து கோலப்பொடி உள்ளிட்டவை தயாரிக்க கடத்தி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story