300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில், 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்கப்படுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ரெங்கராஜ், கீதா உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கோட்டைக்குளம் சாலை, மேற்குரதவீதி, வடக்கு ரதவீதி, மவுன்ஸ்புரம், தாலுகா அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் மொத்த விற்பனை கடைகள், சில்லறை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தம்ளர்கள், பிளாஸ்டிக் காகிதம், பைகளை விற்பனை செய்வதற்காக கடையில் வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story