காரில் கடத்திய 300 கிேலா ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்திய 300 கிேலா ரேஷன் அரிசி பறிமுதல்
x

சுசீந்திரத்தில் காரில் கடத்திய 300 கிேலா ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று சுசீந்திரம் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின்பகுதியில் சிறு, சிறு மூடைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து காருடன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கார் டிரைவர் அரியலூர் மாவட்டம் செங்கந்தூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story