300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி

புதுக்கடை:

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் ஜோதிஷ்குமார், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், ஆகியோர் புதுக்கடை அருகே உள்ள கணபதியான்கடவு பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். ெதாடர்ந்து காரை சோதனையிட்ட போது பிளாஸ்டிக் கேன்களில் மானிய விலை 300 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து மண்எண்ணெய்யை காருடன் பறிமுதல் செய்தனர். பின்னர் மண்எண்ணெய்யை இனயம் அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story