தூத்துக்குடியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா


தூத்துக்குடியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 4 Jun 2023 12:30 AM IST (Updated: 4 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று அவரது உருவச்சிலை மற்றும் உருவப் படங்களுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் தூத்துக்குடியில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட ரஹ்மத் நகர் பூங்கா பகுதியில், மரக்கன்று நடும் விழா நடந்தது. மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் 300 வகையான மரக்கன்றுகளை அந்தப் பகுதியில் நட்டு வைத்தனர். பின்னர் மேயர் என்.பி.ஜெகன் தலைமையில் அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலர் ஆறுமுகம், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, விளாத்திகுளம் வனச்சரகர் கவின், கோவில்பட்டி வனக்காவலர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story