திருச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு 30,427 பேர் எழுதினர்
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 30,427 பேர் எழுதினர். 678 பேர் தேர்வு எழுதவில்லை
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 30,427 பேர் எழுதினர். 678 பேர் தேர்வு எழுதவில்லை
பிளஸ்-1 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு நேற்று காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 14,343 மாணவர்கள், 16,762 மாணவிகள் என்று 31,105 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இதற்காக 133 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாணவ-மாணவிகள் ஆர்வமாக வந்து தேர்வு எழுதினர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
678 பேர் தேர்வுக்கு வரவில்லை
தேர்வு துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பல பள்ளிகளில் இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவ-மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர். தேர்வின் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை வழங்கினர்.
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை நேற்று 13,938 மாணவர்கள், 16,489 மாணவிகள் என்று 30,427 பேர் எழுதினர். 405 மாணவர்கள், 273 மாணவிகள் என்று 678 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் திருச்சி மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகள் 6 பேர் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள். அவர்களுக்காக திருச்சி மத்திய சிறை வளாகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-