போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 31 மனுக்கள் பெறப்பட்டன


போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 31 மனுக்கள் பெறப்பட்டன
x

பெரம்பலூரில் நடைபெற்ற போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 31 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர்

போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் மொத்தம் 31 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


Next Story