310 மூட்டை ரேஷன் அரிசிகள் பறிமுதல்


310 மூட்டை ரேஷன் அரிசிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே 310 மூட்டை ரேஷன் அரிசிகளை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே 310 மூட்டை ரேஷன் அரிசிகளை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.

310 மூட்டை ரேஷன் அரிசிகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையில் வட்ட வழங்கல் ஆய்வாளர் மரியஜோசப்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 310 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள நுகர்வோர் வாணிபக்கழக கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story