32 வாய்க்கால்கள் ரூ.2½ கோடியில் தூர்வாரப்பட்டன


32 வாய்க்கால்கள் ரூ.2½ கோடியில் தூர்வாரப்பட்டன
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பருவமழை பெய்வதையொட்டி 32 வாய்க்கால்கள் ரூ.2½ கோடி செலவில் தூர்வாரப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோயம்புத்தூர்

கோவையில் பருவமழை பெய்வதையொட்டி 32 வாய்க்கால்கள் ரூ.2½ கோடி செலவில் தூர்வாரப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

பாதிப்பு ஏற்பட வில்லை

கோவை லங்கா கார்னர் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளி யேற்றும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று பார்வை யிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் கடந்த ஆண்டு பெய்த மழையால் எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

கோவையில் ஒரே நாளில் அதிகபட்சமாக நேற்று 10.74 செ.மீ. மழை பெய்தது. இந்த அளவிற்கு மழை பெய்தாலும் கோவை நகரில் எங்கும் பெரிய அளவில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட வில்லை.

தூர்வாரப்பட்ட வாய்க்கால்கள்

கோவையில் 32 வாய்க்கால்கள் உள்ளன. அவை, 128 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் தூர்வாரப் பட்டு உள்ளது. இதேபோல் 273 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.5 கோடியே 6 லட்சம் செலவில் தூர்வாரப் பட்டது.

மேலும் 271 சிறு பாலங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டு உள்ளன.

இதனால் நகரில் எந்த இடத்திலும் மழைநீர் தேங்க வில்லை. மாநகராட்சி சார்பில் மோட்டார் பம்ப்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கூடுதல் ஊழியர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தாலும் மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் மட்டும் ஒரு துணை மின் நிலையம் மழையால் பாதிக்கப்பட்டது. அது 2 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது.

மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மின் வினியோகத்தை சீரமைக்க தமிழகம் முழுவதும் கூடுதலாக 11 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத் தப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் 1440 பேர் பகலிலும், 600 பேர் இரவிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story