போதைப்பொருட்கள் விற்ற 32 பேர் கைது


போதைப்பொருட்கள் விற்ற 32 பேர் கைது
x

வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்ற 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மளிகை, பெட்டிக்கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அவ்வப்போது போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.

வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி, தாலுகா, அரியூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனை செய்தனர். இந்த சோதனையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 3 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story