320 அடி நீள காற்றாலை விசிறி றெக்கை லாரியில் கொண்டு சென்றதால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


320 அடி நீள காற்றாலை விசிறி றெக்கை லாரியில் கொண்டு சென்றதால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x

320 அடி நீள காற்றாலை விசிறி றெக்கை லாரியில் கொண்டு சென்றதால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கரூர்

சேலம் மாவட்டத்தில் இருந்து 320 அடி நீள காற்றாலை விசிறியின் றெக்கை லாரியில் ஏற்றப்பட்டு கரூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே லாரி வளைந்து செல்ல வேண்டி இருந்ததால் அந்த இடத்தில் லாரி திரும்ப முடியாமல் நின்றது. இதனால் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதேபோல் தவிட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, அந்த லாரி மிகவும் மெதுவாக அங்கிருந்து சென்றது. இதையடுத்து, மற்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story