33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அமலாக்கத்துறை எஸ்.பி.யாக இருந்த வருண்குமார் ஐபிஸ் திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. அன்கிட், சென்னை தி.நகர் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தி.நகர் உதவி ஆணையராக இருந்த அருண் கபிலன் சேலம் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் சக்திவேல் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடையாறு உதவி ஆணையர் மகேந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை வடக்கு உதவி ஆணையராக பணியாற்றி வரும் அரவிந்த் ஐபிஎஸ் சிவகங்கை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சில ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.