ரூ.33 லட்சம் நிலம் மீட்பு
நெல்லை அருகே ரூ.33 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் பாஸ்கர். இவருக்கு பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி பகுதியில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள 22 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் மாற்றி இருப்பது தெரியவந்தது. எனவே இந்த நிலத்தை மீட்டுத்தருமாறு பிரான்சிஸ் பாஸ்கர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுத்தார். அவரது உத்தரவுப்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீராள்பானு, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி, ஏட்டு நாகராஜன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி, நிலத்தை மீட்டனர். இதையடுத்து நேற்று பிரான்சிஸ் பாஸ்கர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் நிலத்துக்கான ஆவணத்தை, சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்.
Related Tags :
Next Story