தனியார் பஸ் கவிழ்ந்து 35 பேர் படுகாயம்


தனியார் பஸ் கவிழ்ந்து 35 பேர் படுகாயம்
x
திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

காஞ்சீபுரத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் வந்தவாசியை கடந்து தேசூர் அருகே திரைக்கோவில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது.

இதனால் பஸ்சில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து அய்யோ அம்மா என அலறினர். அக்கம் பக்கத்தில் இந்தவர்கள் விரைந்து வந்த உள்ளே இருந்தவர்களை மீட்டனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் திருவம்பட்டை சேர்ந்த நீலா (வயது 39), கொசப்பாளையத்தை சேர்ந்த பூங்காவனம் (47), நல்லூர் வெள்ளையன் (65), ஊர்குடி ராஜாமணி (60), மகேஸ்வரி (38), வெடால் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் (55), வந்தவாசி சீனிவாசன் (45), கண்டவர்ரெட்டி ரோஸ் (32), செய்யாறு சாந்தி (35), கருங்குழி பார்வதி (65), உமா (33), மேலஓலக்கூர் ஏழுமலை, விஜயா(46), ரேணுகா, செஞ்சியை சேர்ந்த விஜயா (54), மேல் பள்ளம் கிராமம் நாகம்மாள் (40), இளங்காடு தீபா (35), காஞ்சீபுரம் தமிழ்ஒளி (43), உள்ட 30 பேர் காயம் அடைந்தனர். பஸ் கண்டக்டர் பூங்காவனத்துக்கு கால் முறிவு ஏற்பட்டது. 10 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story