350 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


350 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x

கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீசார் நேற்று மாலையில் பூந்தோப்பு காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 10 கேன்களில் 350 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது. விசாரணையில் இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவுடன் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து வட்டவழங்கல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Next Story