கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 377 பேர் சாவு
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 377 பேர் இறந்துள்ளனர்.
27 பேர் கைது
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 14 கொலைகள் நடைபெற்றன. 2022-ம் ஆண்டு 200 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, திருடுபோன ரூ.69 லட்சத்து 93 ஆயிரத்து 325 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் போக்சோ சட்டத்தில் 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராயம், கஞ்சா விற்பனை செய்ததாக 3,494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் 413 பேரும், 2022-ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் 377 பேரும் உயிர் இழந்துள்ளனர்.
930 செல்ேபான்கள் மீட்பு
வாகன விதிமுறைகளை மீறியதாக கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் மொத்தம் ரூ.9 கோடியே 81 லட்சத்து 93 ஆயிரத்து 558 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றப்பிரிவு மூலம் கடந்த 2022-ம் ஆண்டும் மட்டும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 53 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.65 லட்சத்து 81 ஆயிரத்து 199 முடக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ெமாத்தம் ரூ. 11 லட்சத்து 74 ஆயிரத்து 762 ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 930 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.