திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 38 டிராக்டர்கள்


திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 38 டிராக்டர்கள்
x
தினத்தந்தி 1 May 2023 12:30 AM IST (Updated: 1 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 38 டிராக்டர்களை கனிமொழி எம்.பி நேற்று வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 38 டிராக்டர்களை கனிமொழி எம்.பி நேற்று வழங்கினார்.

திடக்கழிவு மேலாண்மை

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் தூய்மை பாரத இயக்க திட்டத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கடைகள் மூலம் உருவாக்கப்படும் கழிவுகள், மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உற்பத்தியாகும் கழிவுகளை சேகரித்து குப்பைகள் தரம் பிரிக்கும் கூடத்துக்கு கொண்டு செல்வதற்கு டிராக்டர்கள் வாங்க தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள ஊராட்சிகளுக்கு 35 எச்.பி. திறன் கொண்ட 27 டிராக்டர்களும், 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள பஞ்சாயத்துகளுக்கு 42 எச்.பி. திறன் கொண்ட 11 டிராக்டர்களும் ஆக மொத்தம் 38 டிராக்டர்கள் வாங்கப்பட்டன.

டிராக்டர்கள்

இந்த டிராக்டர்களை பஞ்சாயத்து தலைவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 32 பஞ்சாயத்துகளுக்கு 38 டிராக்டர்களை பஞ்சாயத்து தலைவர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story