384 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


384 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:30 AM IST (Updated: 6 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

384 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்


சேலத்தில் இருந்து மதுரை நோக்கி நேற்று முன்தினம் சரக்கு வேன் ஒன்று சென்றது. அந்த வேனை மதுரை திருநகரை சேர்ந்த பெருமாள் (வயது 45) என்பவர் ஓட்டினார். கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி பகுதியில் வந்த போது பின்னால் வந்த கார், எதிர்பாராதவிதமாக வேனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

இதற்கிடையே காரில் இருந்து பதற்றத்துடன் இறங்கிய 2 பேர் காருக்குள் இருந்து சாக்கு மூட்டைகளை எடுத்து சாலையோர பள்ளத்தில் வீசினர். இதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், வேடசந்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து போலீசார் காரில் சோதனையிட்ட போது சாக்கு மூட்டைகளில் 384 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பெருமாள் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story