வீட்டின் முன்பு விளையாடியபோது விபரீதம் - லாரி மோதி காயம் அடைந்த 3-ம் வகுப்பு மாணவன் சாவு


வீட்டின் முன்பு விளையாடியபோது விபரீதம் - லாரி மோதி காயம் அடைந்த 3-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 10 Feb 2023 1:49 AM IST (Updated: 10 Feb 2023 4:21 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் முன்பு விளையாடியபோது லாரி மோதி காயம் அடைந்த 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்

மதுரை


மதுரை ஒத்தக்கடை ராஜாக்கூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மங்கலநாதன். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களது மகன் ஆதிசிவன் (வயது 8). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி, சிறுவன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பிரியங்கா அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story