3-ம் சனிக்கிழமை விழா
துத்திப்பட்டு பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை விழா நடந்தது.
திருப்பத்தூர்
ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பிந்து மாதவ பெருமாள் என்கிற வரதராஜபெருமாள், குமுதவள்ளி பெருந்தேவி, ஆண்டாள் உடனாகிய கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை பெருவிழா நடைபெற்றது. விழாவில் திருப்பதியில் ஒரு நாள் தரிசனம் விமர்சையாக நடைபெற்றது. மேலும் மூலவருக்கு பூரண புஷ்பா கலை அலங்காரம், மஞ்சள், குங்குமம், வளையல் வழங்குதல் மற்றும் மகா பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
ஸ்ரீ மகாவிஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை தலைவர் டில்லி பாபு, பழனி, பொருளாளர் ஹரிகுமார், உறுப்பினர் தியாகராஜன், மனோகர், சுரேஷ்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story