3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
திருப்பூர்
அவினாசி அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் கடந்த 2014 -ம் ஆண்டு ரோட்டில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கிஷோர் (வயது 30), குன்னத்தூர் தாளப் பதியை சேர்ந்த இம்ரான் (32), திருப்புரை சேர்ந்த மோகன்குமார் (35) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு அவினாசி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எஸ். சபீனா குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்
Next Story