கிடா விருந்தில் கோஷ்டி மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு


கிடா விருந்தில் கோஷ்டி மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு
x

முத்துப்பேட்டை அருகே, கோவில் திருவிழாவையொட்டி நடந்த கிடா விருந்தில் கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே, கோவில் திருவிழாவையொட்டி நடந்த கிடா விருந்தில் கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

கிடா விருந்து

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் காலனி தெருவை சேர்ந்தவர் அரங்கநாதன் மகன் அரவிந்தன் (வயது30). இவருடைய தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வரெத்தினம் (55) தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு கிடா வெட்டி பூஜை நடந்தது. பின்னர் கிடா விருந்தும் நடைபெற்றது.

அப்போது அரவிந்தன் தரப்பினருக்கும், செல்வரெத்தினம் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொண்டனர்.

4 பேருக்கு அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டில் அரவிந்த் (25), ஆனந்தராஜ் (23), சுந்தர் (21), நாகராஜன் (24) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அரவிந்தன் மனைவி எழிலரசி (27) அளித்த புகாரின்பேரில் 7 பேர் மீதும், அதேபோல் செல்வரெத்தினம் மகள் விஜயபாரதி (22) கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த சிவமோகன் (26), மதிக்குமார் (29), சிவப்பிரகாசம் (23), செல்வரத்தினம் (65), கோவிந்தசாமி (37), ஜீவானந்தம் (25), விஸ்வநாத் (18) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோஷ்டி மோதலை தொடர்ந்து அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story