வாலிபரை தாக்கியதாக 4 பேர் கைது


வாலிபரை தாக்கியதாக 4 பேர் கைது
x

வாலிபரை தாக்கியதாக 4 பேர் கைது

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை கரையிருப்பு அருகே ஒருவரது இறுதி சடங்கு கட்டளைகுடியிருப்பு இடுகாட்டில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது ரோட்டில் கூடி இருந்தவர்களை வழிவிடுமாறு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தாழையூத்து பசும்பொன் நகரை சேர்ந்த நாகமுத்து (வயது 25) என்பவர் ஹார்ன் அடித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் நாகமுத்துவை சரமாரியாக தாக்கினார்கள். அவருக்கு ஆதரவாக தட்டிக்கேட்க வந்த ஆயிரத்தான் (56) என்பவரையும் தாக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகமுத்து, ஆயிரத்தான் தரப்பினர் நெல்ைல -மதுரை ரோட்டில் கரையிருப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 2 பேரையும் தாக்கியதாக ஆர்.எஸ்.ஏ. நகரை சேர்ந்த குமார் மகன்கள் சதீஷ் (25), சுரேஷ் (31) மற்றும் அதே ஊரை சேர்ந்த பிரசாந்த் (24), பிரதீப் (22) ஆகிய 4 பேரையும் நேற்று தச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.


Next Story