பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
ஓசூரில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:-
ஓசூர் அட்கோ போலீசார் பெத்தகுள்ளு ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சிவா (வயது 31), பாபு (32), முரளி (31), கார்த்திகேயன் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13,700 மற்றும் 5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது சூதாடியவர்கள் போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire