அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள விஜயரங்கபுரம் பகுதியில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், ராமமூர்த்தி ஆகியோரது தலைமையில் போலீசார் விஜயரங்கபுரம், துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், பசும்பொன்நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 54) என்பவரிடம் இருந்த 40 குரோஸ் வெள்ளைதிரி, தெற்கு தெருவில் பாலசுப்பிரமணியன் (45) என்பவரிடம் இருந்து 40 குரோஸ் வெள்ளை திரி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளிராஜ் (47) என்பவரிடம் இருந்து 42 குரோஸ் வெள்ளைதிரி, நடுத்தெருவை சேர்ந்த சரவணன் (56) என்பவரிடம் இருந்து 40 குரோஸ் வெள்ளை திரி மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story