மது விற்ற 4 கைது
மது விற்ற 4 கைது செய்யப்பட்டனர்.
கரூர்
லாலாபேட்டை அருகே மேட்டு மகாதானபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 55), மஞ்சுளா என்கிற பாப்பா (45), நதியா (35) ஆகிய 3 பேரையும் மது விற்றதாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 22 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பிச்சம்பட்டிவாய்க்கால் பாலம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் மது விற்றதாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story