சரக்கு வாகனத்தை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது


சரக்கு வாகனத்தை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது
x

நெய்வேலி அருகே சரக்கு வாகனத்தை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் பி-2 பிளாக் மாற்று குடியிருப்பு 3-வது தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன்(வயது 30). இவரது சரக்கு வாகனத்தை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரா நகர் பி-2 பிளாக் மாற்று குடியிருப்பு வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த மணி மகன் சூர்யா(21), திருசங்கு மகன் சசிகுமார்(19), கண்ணன் மகன் லோகேஷ்(23), வடக்குத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் ஸ்ரீராம்(21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story