லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி- பருப்பு கடத்திய 4 பேர் கைது
லோடு ஆட்ேடாவில் ரேஷன் அரிசி மற்றும் துவரம் பருப்பு கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
லோடு ஆட்ேடாவில் ரேஷன் அரிசி மற்றும் துவரம் பருப்பு கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை
குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேட்டையை சேர்ந்த முன்னா முகமது (வயது 32), சித்திக் (27) ஆகியோர் லோடு ஆட்டோவில் 1,225 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, ரேஷன் அரிசியுடன் லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
துவரம் பருப்பு
குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் நேற்று தென்காசி மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்த இசக்கிமுத்து (38), தளவாய்புரத்தை சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் மணி, ராஜா ஆகியோர் சேர்ந்து ஒரு லோடு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் துவரம் பருப்பை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இசக்கிமுத்து, விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து, துவரம் பருப்புடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.மேலும் மணி, ராஜா ஆகியோரை தேடி வருகிறார்கள்.