தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது


தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
x

திருவண்ணாமலையில் தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

திருவண்ணாமலை கரியான்செட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர், தி.மு.க தொண்டரணி நகர துணை அமைப்பாளர். இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் 14-ந் தேதி நள்ளிரவு சங்கரின் வீட்டின் வெளிப்புறத்தில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசினர். இதனால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் சேதம் அடைந்தது.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டு சோதனை செய்தனர். அந்த பதிவில் 2 மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடுவது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த யேசுதாஸ் என்பவரின் மகன் ஸ்ரீபன்ராஜ் (வயது 29) என்பவருக்கும், சங்கருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

முன்விரோதத்தால் அவரது தூண்டுதலின் பேரில் தேனிமலையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் அரசு (21), எடப்பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரின் தமிழ்பிரபாகரன் (23), கரியான்செட்டி தெருவை சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் மகன் கணேசன் (22) ஆகியோர் அவருடன் இணைந்து சங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

இதையடுத்து இன்று ஸ்ரீபன்ராஜ், அரசு, தமிழ்பிரபாகரன், கணேசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story