Normal
அறந்தாங்கி பகுதியில் திருட முயன்ற 4 பேர் கைது
அறந்தாங்கி பகுதியில் திருட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி சோலை ஆண்டவர் கோவில் அருகே நேற்று ஒரு கார் நீண்ட நேரமாக நின்று இருந்தது. அப்போது அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் அப்பகுதியில் ரோந்து சென்றுள்ளார். இதையடுத்து, காரில் வந்த காரைக்குடியை சேர்ந்த அராபத் (வயது 26), அறந்தாங்கியை சேர்ந்த பைசல் (27), தேவகோட்டையை சேர்ந்த பாண்டிசெல்வம் (21), சிவகங்கையை சேர்ந்த செல்வராசு (55) ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அராபத், பாண்டிசெல்வம் ஆகியோர் மீது ஏற்கனவே ஆடு திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் அறந்தாங்கி பகுதியில் திருட திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story