இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய 4 பேர் கைது


இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய 4 பேர் கைது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் பூந்தோட்டம் குமரவேல் நகர் பகுதியைச்சேர்ந்தவர் விஜி என்கிற விஜயகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போன் கடை முன்புள்ள விளம்பர பதாகையில் அதே பகுதியை சேர்ந்த தீனா என்ற வைத்தியநாதன் இறப்பின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை பூந்தோட்டம் பகுதியைச்சேர்ந்த அன்பரசன்(30) என்பவர் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அன்பரசன் தூண்டுதலின்பேரில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த அவரது சகோதரர் கலையரசன், வெங்கட், சிவக்குமார், மணி மகன் அன்பரசன், சிலம்பரசன், சஞ்சய், மின்னல் தினேஷ், கவுதம், பிரசாந்த், டோனி, அமீர், ஆதவன், கிருபாகரன், அங்கம்மா பாலாஜி ஆகிய 14 பேர் சேர்ந்து விஜயகுமாரின் மகன் சந்திரமோகனை திட்டி தாக்கியதோடு அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயகுமாரின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கலையரசன் உள்ளிட்ட 14 பேர் மீதும் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், அன்பரசன், சஞ்சய், கவுதம் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story