திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது


திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது
x

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருட்டு

ஸ்ரீரங்கம் மேல உத்தரவீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரா (வயது 40) கோவில் பூசாரி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் திருடிச்சென்று விட்டனர். இதே போல் புலி மண்டபம் சாலையில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டிலும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.

மூலத்தோப்பு ஆண்டாள் நகரை சேர்ந்த பாஸ்யம் என்ற கோவில் குருக்கள் வீட்டிலும் டி.வி, தங்க நகைகள், பணம் திருட்டு போனது.

4 பேர் கைது

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாலாஜி, சரவணன், அமாவாசை என்கிற கோவிந்தராஜ், ராஜா ஆகியோைர பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 4 பேரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து ரூ.1 லட்சம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், டி.வி. உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story