ஈரோட்டில் 4 நாட்களாகடாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்தவருமான வரித்துறை சோதனை நிறைவுமுக்கிய ஆவணங்கள் சிக்கின
ஈரோட்டில் 4 நாட்களாக டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது முக்கிய ஆவணங்கள் சிக்கின
ஈரோடு
ஈரோடு திண்டல் சக்திநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 65). டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை கொண்டு செல்லும் லாரி ஒப்பந்ததாரரான இவரது வீட்டிலும், அதே பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்டு அலுவலகத்திலும் கடந்த 26-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், சச்சிதானந்தத்தின் வங்கி கணக்கு, லாக்கரில் உள்ள பொருட்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 4 நாட்களாக நடந்து வந்த சோதனை நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. இந்த சோதனையில் சச்சிதானந்தனின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் 4 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story