காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பி ஓட்டம்


காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பி ஓட்டம்

கோயம்புத்தூர்

கணபதி

கோவை கணபதியில் உள்ள காப்பகத்தில் இருந் 4 பெண்கள் தப்பி ஓடினார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண்கள் தப்பி ஓட்டம்

கோவை கணபதியில் உள்ள லட்சுமி புரத்தில் ஆதரவற்றோர் பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. வீடுகளில் இருந்து ஆதரவு இல்லாமல் வெளியே வருபவர்கள், காணாமல் போன பெண்களை மீட்கும்போது இந்த காப்பகத்தில் போலீசார் தங்க வைப்பது வழக்கம்.

இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணபதி பகுதியை சேர்ந்த அம்பிகா (வயது 42) என்ற வார்டன் பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த 19 வயது இளம்பணெ், 22 வயது, 37 வயது 26 வயது ஆகிய வயதுடைய 4 பெண்கள் வார்டனிடம் இருந்து சாவியை எடுத்து கதவை திறந்து தப்பிச்சென்றனர்.

2 பேர் மீட்பு

இதில் 37 வயதான பெண் தனக்கு 3 வயது குழந்தையுடன் தப்பிச்சென்றார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய 2 பேரை மீட்டனர். மீதமுள்ள 2 பேரும், அவர்களுடைய வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தீவிர விசாரணை

வீடுகளில் இருந்து துரத்தப்பட்டவர்கள், பெற்றோர் மற்றும் கணவருடன் செல்ல விருப்பம் இல்லாதவர்கள் இந்த காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வருகிறார்கள். அவர்கள் விரும்பினால் காப்பக நிர்வாகிகள் மற்றும் போலீசாரிடம் தெரிவித்துவிட்டு தாராளமாக தங்கள் வீடுகளுக்கு செல்லலாம்.

ஆனால் இந்த 4 பேரும் தெரியாமல் தப்பி ஓடி உள்ளனர். அதில் 2 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 2 பேரும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை மீட்ட பின்னர் 4 பேருக்கும் விருப்பம் இருந்தால் சொந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

----


Next Story