படந்தாலுமூட்டில் அதிக பாரம் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் - 4 பேர் கைது
படந்தாலுமூட்டில் அதிக பாரம் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
களியக்காவிளை:
படந்தாலுமூட்டில் அதிக பாரம் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதமும் விதித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை பத்மநாப-புரம் சப்-கலெக்டர் கவுசிக், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர், தனி வருவாய் ஆய்வாளர் பிரபுதாஸ் மற்றும் தனி தாசில்தார் சேகர் ஆகியோர் படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முறையான அனுமதியின்றி அதிகபாரம் ஏற்றிச் சென்ற 4 கனிமவள லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் லாரிகளை ஓட்டிச் சென்ற கொல்லத்தைச் சேர்ந்த மனுமுரளி (வயது 30), இடுக்கியை சேர்ந்த நிறூஸ் (33), தென்காசியை சேர்ந்த சுரேஷ்குமார் (38), கொல்லத்தைச் சேர்ந்த மஸ்ஜித் (40) ஆகியோரை கைது செய்தனர்.