ஓடும் ரெயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ஓடும் ரெயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை
ஓடும் ரெயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி உள்ளிட்ட ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவிலிருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.ரெயில்வே போலீசார் அந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது கழிவறையில் வெள்ளை நிறத்தில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டதில் 4 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் ெஎசய்தனர். அதனை கடத்தி வந்த நபர் நழுவிவிட்டார்.
அவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story