கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலியான சம்பவம்:மேலும் 4 சாராய வியாபாரிகள் கைது
கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலியான சம்பவம்: மேலும் 4 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்த வியாபாரிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபல சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டார். மேலும் 4 வியாபாரிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று சாராய வியாபாரிகளான முத்து (வயது 45), ஆறுமுகம் (40), ரவி (42), மண்ணாங்கட்டி(38) என்பவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story