ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உண்ணாவிரதம்
14 வருடத்திற்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து தரக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 வருடத்திற்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து தரக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 வருடங்களுக்கு முன்பு மாயம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், நாகை குழந்தைகள் காப்பகத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 2008-ம் ஆண்டு பணி முடிந்து வீடு திரும்பும்போது மாயமானார்.
பன்னீர்செல்வத்தை கண்டுபிடித்து தரக்கோரி அவரது குடும்பத்தினர் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஒரே குடும்பத்தினர் 4 பேர் உண்ணாவிரதம்
இந்த நிலையில் பன்னீர்செல்வம் குறித்து எந்த தகவலும் தெரியாததாலும், இதுகுறித்து நாகூர் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் கோரிக்கை பேனரை கையில் பிடித்துக்கொண்டு நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் போனவரை கண்டுபிடித்து தர வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரையும் விசாரணைக்காக நாகூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
14 வருடத்திற்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து தரக்கோரி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.