4 மாத குழந்தை மர்ம சாவு


4 மாத குழந்தை மர்ம சாவு
x
தினத்தந்தி 29 Aug 2023 1:45 AM IST (Updated: 29 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே 4 மாத குழந்தை மர்மமான முறையில் முறையில் இறந்து கிடந்தது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபரும், 17 வயது சிறுமியும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அந்த சிறுமிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த அந்த சிறுமி குழந்தையை தூக்கி கொண்டு நிலக்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் குறை பிரசவத்தில் பிறந்ததால் நேற்று முன்தினம் இரவு அந்த குழந்தைக்கு மருந்து கொடுத்து சிறுமி தூங்க வைத்தார். நேற்று அதிகாலையில் எழுப்பியபோது குழந்தை எந்த அசைவும் இல்லாமல் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து குழந்தையின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அவர் தனது குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக நிலக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story