திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

லாரி டிரைவர்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மகன் ஈஸ்வரமூர்த்தி(வயது 25). லாரி டிரைவரான இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அம்மம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகள் நித்யா(21) என்பவருக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. நித்யா 2 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அம்மம்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு கணவர் வீட்டுக்கு வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நித்யாவின் மாமனார், மாமியார் இருவரும் வயலுக்கு சென்று விட்டனர். பின்னர் மதியம் 2.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் பிணமாக நித்யா தொங்கிக்கொண்டிருந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து நித்யாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக நித்யாவின் தாய் பத்மா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து நித்யா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் நித்யாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story