வெள்ளி கொலுசுகளை திருடிய 4 வடமாநில வாலிபர்கள் கைது


வெள்ளி கொலுசுகளை திருடிய 4 வடமாநில வாலிபர்கள் கைது
x

குறைந்த விலையில் நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக வெள்ளி கொலுசுகளை திருடிய 4 வடமாநில வாலிபர்கள் கைது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடி அண்ணாமலை வேடியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மனைவி அலமேலு (வயது 29).

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்த போது வீட்டிற்கு வந்த வட மாநிலத்தவர்கள் 4 பேர் குறைந்த விலையில் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.

இதனை நம்பி அலமேலு வீட்டில் இருந்த 3 வெள்ளி கொலுசுகளை பாலீஷ் போட கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர்களில் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார்.

தண்ணீர் எடுக்க அலமேலு வீட்டிற்குள் சென்றார். பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது 4 பேரும் வெள்ளி கொலுசுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து அவர் தனது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தப்பியோடிய 4 பேரையும் பிடித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் (23), கோனுகுமார் (21), அமீத்குமார் (20), நீரஜ்குமார் (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story