வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய 4 பேர் கைது


வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய 4 பேர் கைது
x

வடக்கு விஜயநாராயணத்தில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான். இவருடைய மனைவி அம்மச்சியார் (வயது 47). இவர்களுடைய மகன் அஞ்சன்குமார். இவர் நேற்று முன்தினம் நெல்லையில் நடந்த திருமண விழாவுக்கு சென்றார். அப்போது அஞ்சன்குமாருக்கும், அங்கு வந்த நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த அய்யப்பன் என்ற பருப்புசோறு (35) என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அய்யப்பன் தனது ஆதரவாளர்களுடன் 4 மோட்டார் சைக்கிள்களில் வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள அஞ்சன்குமார் வீட்டுக்கு கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று, அங்கிருந்த அஞ்சன்குமாரின் தாயார் அம்மச்சியாரை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து, மறுகால்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன் (19), அருணாசலம் (28), தமிழ்ச்செல்வன் (24), நாங்குநேரியைச் சேர்ந்த ஆறுமுகம் (32) ஆகிய 4 பேரை கைது செய்தார். அவர்களது 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தலைமறைவான அய்யப்பன், மறுகால்குறிச்சியைச் சேர்ந்த குமார் என்ற புரோட்டா குமார் (27), சேகர் (29), செல்வம் (30) ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story