இறால் பண்ணையில் மின் வயர்களை திருடிய 4 பேர் கைது


இறால் பண்ணையில் மின் வயர்களை திருடிய 4 பேர் கைது
x

அதிராம்பட்டினம் அருகே இறால் பண்ணையில் மின் வயர்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமம் முருகன் கோவில் எதிரில் உள்ள பகுதியில் கோவை மாவட்டம் சின்னவேலம்பட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணை இயங்கி வருகிறது. இதனை கோவையை சேர்ந்த தமிழோவியன் என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இறால் பண்ணையில் இருந்த மின் வயர்கள், மின் மோட்டார்கள் ஆகியவற்றை மர்ம நபர்களை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பட்டுக்கோட்டை மெயின் ரோடு பகுதியில் உள்ள செல்லி குறிச்சி ஏரி அருகே 4 பேர், ஒரு பொருளை போட்டு தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதை தொடர்ந்து அதிராம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது தீயிட்டு கொளுத்திய பொருட்கள் மின் வயர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கீழதோட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 20),சுரேஷ் (22), காலாவர்ணம் (22), பாலு (19) ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் இறால் பண்ணையில் இருந்து திருடி வந்த மின்வயர்களை தீயிட்டு கொளுத்தியதும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மின் ஒயர் மற்றும் மின்மோட்டார்களையும் மீட்டனர்.


Next Story