பணம் திருடிய 4 பேர் கைது
பந்தலூர் அருகே பணம் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே பொன்னானியில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 500-ஐ மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் பாபு தேவாலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். பாட்டவயலில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் நேபாளத்தை சேர்ந்த கரண் (வயது 24), மோகன் (24), ஹரி ஜோஷி (25), லட்சுமணன் (23) ஆகியோர் என்பதும், இவர்கள் கடையில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story