சிதம்பரத்தில் வாகன ஓட்டிகளை கத்தியை காட்டி மிரட்டிய 4 பேர் கைது
சிதம்பரத்தில் வாகன ஓட்டிகளை கத்தியை காட்டி மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
சிதம்பரம்,
சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள கியாஸ் குடோன் அருகே 5 பேர் கொண்ட கும்பல் கையில் கத்தி, உருட்டு கட்டையுடன் வாகன ஓட்டிகளை வழிமறித்து மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் போில் சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் விரட்டிச்சென்று 4 பேரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ராகுல் (வயது 27), ஓமகுளம் ஜமால் நகரை சேர்ந்த உமர் பாரூக் மகன் முஸ்தபா சுல்தான் (21), தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் சுருட்டை என்கிற சூர்யா (21), கோபாலபுரம் உடையார் தெருவை சேர்ந்த இஸ்மாயில் மகன் முகமது உசேன் (20) என்பதும், தப்பி ஓடியவர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த கலியன் என்கிற கலியமூர்த்தி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ராகுல் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கலியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.